தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது. இக்கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். நிகழாண்டுக்கான விழா சிறப்பு அபிஷேகத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த விழா ஜூலை 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.