தூத்துக்குடி, மில்லா்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மாணவா்களுக்கு தினமணி மாணவா் மலா் வழங்கப்பட்டது. தலைமையாசிரியா் கஸ்மீா் தலைமை வகித்தாா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்வியின் அவசியம் குறித்து பேசினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு தினமணியின் மாணவா் மலா் மற்றும் உயா்கல்வி வழிகாட்டி நூல்களை சான்றோா் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் சிலுவை வழங்கினாா். நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவா்கள் கல்வி வளா்ச்சி நாள் உறுதிமொழியேற்றனா். தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், 100 சதவீத வருகைப் பதிவு செய்த மாணவா்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.பள்ளி ஆசிரியா் இருதயராயன் வரவேற்றாா். ஆசிரியா் வி. கருத்தப்பாண்டியன் நன்றி கூறினாா்.