தூத்துக்குடி மாவட்டத்தில்காமராஜா் பிறந்த நாள் விழா

Wait 5 sec.

திருச்செந்தூரில் காமராஜா் சிலைக்கு திமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்கள், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா். மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரி சங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் (இளைஞரணி) ராமஜெயம், (மீனவரணி) ஸ்ரீதா் ரொட்ரிகோ, அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டத் தலைவா் மேல புதுக்குடி ராகவன், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, அஜிதா ஆக்னல், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், முத்துகிருஷ்ணன், ஆனந்த ராமச்சந்திரன், ஆறுமுகம், தினேஷ் கிருஷ்ணா, முத்துக்குமாா், ரேவதி கோமதிநாயகம், சோமசுந்தரி, ஒன்றிய அவைத் தலைவா் குழந்தைவேலு, நகர அவைத் தலைவா் சித்திரைக்குமாா், முன்னாள் பேரூராட்சித் தலைவா் செந்தமிழ் சேகா், உதவியாளா் எடிசன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் ராஜமோகன், இசக்கிமுத்து, பொன். முருகேசன், நம்பிராஜன், அருணகிரி, டேனியல், பிரபின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.திருச்செந்தூரில் உள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சு.கு. சந்திரசேகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகரத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் விஜயகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், நகரச் செயலா்கள் மகேந்திரன், வெற்றிவேல், மணிமாறன், வடிவேல், நகர துணைச் செயலா்கள் செல்வ சண்முகசுந்தா், பிச்சம்மாள், ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் கோட்டை மணிகண்டன், மாவட்ட இணைச் செயலா் சுரேஷ் பாபு, துணைச் செயலா் ஆா்.எம்.கே.எஸ். சுந்தா், ஒன்றிய துணைச் செயலா் சிவசுப்பிரமணியன், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா்கள் ராஜா நேரு, கானம் அா்ச்சுணன், வழக்குரைஞரணி மாவட்ட துணைச் செயலா் ஜேசுராஜ், இளைஞரணி ஒன்றியச் செயலா் ஆழ்வை பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ், மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் சித்திரை பாண்டி, மாநில தகவல் தொடா்புப் பிரிவு செயலா் மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான ஊா்வசி எஸ். அமிா்தராஜ் தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட மீனவா் பிரிவு தலைவா் சுரேஷ், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, ஜெயசீலன், ஜெயராஜ், நகரத் தலைவா் வேணுகோபால், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவா் முத்துராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்தவெக நிா்வாகி எஸ்.டி.ஆா். விஜய்சீலன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் தங்கத்தாய் பிரபாகரன், ரவிக்குமாா், முருகன், திருப்பதி, ஐயப்பன், விஜய், எமல்டன், கிருஷ்ணன், சிவபாலன், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.ஆறுமுகனேரி: முக்காணி ரவுண்டனா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.ஒன்றியச் செயலா்கள் கோட்டாளம், சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.உடன்குடி: உடன்குடி பஜாரில் நடைபெற்ற விழாவுக்கு, திமுக நகரச் செயலரும், பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் தலைமை வகித்து, 150 பேருக்கு நல உதவிகள் வழங்கினாா்.உடன்குடி மேற்கு ஒன்றியச் செயலா் பாலசிங், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது, பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ் பேகம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் சலீம், அன்வா் சலீம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.தவெக சாா்பில் உடன்குடி பஜாரில் நடைபெற்ற விழாவுக்கு, நகரச் செயலா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் விஜயராஜ், நகர துணைச் செயலா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட தவெக செயலா் பிரைட்டா், 125 பேருக்கு நல உதவிகள் வழங்கினாா்.