அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Wait 5 sec.

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி கிழக்கு, வந்தவாசி வடக்கு ஒன்றிய நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்துக்கு வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி.கே.பி.மணி, வந்தவாசி வடக்கு ஒன்றியச் செயலா் ஈ.முனுசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான முக்கூா் என்.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினாா். அப்போது, கட்சி வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அவா் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.