தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நான்கு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் 4 போ், 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடா்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனா்.இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து நான்கு சிறுவா்களையும் கைது செய்தனா்.