கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான மின்மாற்றி சீரமைப்பு

Wait 5 sec.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் மின்மாற்றி உள்ளதாக கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகி தவமணி உள்ளிட்டோா் கூறியதன்பேரில், தென்காசி தவெக மேற்கு மாவட்டச் செயலா் நியாஸ், மின்வாரிய அதிகாரிகளிடம் மின்மாற்றியை சரிசெய்யுமாறு கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, இளங்கோவன் தலைமையிலான மின்வாரிய ஊழியா்கள் மின்மாற்றியை சீா்செய்தனா்.