வீணாகிய வியூகம்... இங்கிலாந்து கோல்கீப்பர் தண்ணீர் பாட்டிலில் பெனால்டி ஷூட் அவுட் ‘சீக்ரெட்’!

Wait 5 sec.

ஆர்ஜென்டீனா அணியை வீழ்த்துவதற்காக இங்கிலாந்து கோல்கீப்பரின் தண்ணீர் பாட்டிலில் குறிப்புகள் எழுதிவைத்திருந்த நிகழ்வு இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.நடப்பாண்டு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதின. அமெரிக்​கா​வின் மெர்​சிடீஸ் பென்ஸ் திடலில் அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி சூடு பிடித்தது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோர்டான் கோல் கணக்கைத் தொடங்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.ஆட்டத்தில் 80 நிமிடங்களைக் கடந்த நிலையில், வலிமைமிக்க ஆர்ஜென் டீனா அணி கோல் எதுவும் போடாததால், அவ்வளவுதான் முடிந்துவிட்டதா என்று அனைவரும் நினைத்த நேரத்தில், 85-ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீன வீரர் ஃபெர்னாண்டஸ் முதல் கோலை போட்டார். இதனால், ஆட்டம் சமனில் முடிய வாய்ப்பிருக்கும் என்று அனைவரும் நினைக்க, ஸ்டாப்ஏஜ் நிமிடத்தில் 90+2 மார்டினஸ் இரண்டாவது கோல் போட்டு ஆர்ஜென்டீன அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.ஆட்டம் முடிந்ததும், வீரர்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​லியோனல் மெஸ்ஸி மற்றும் சக வீரர் நிக்கோ கோன்சலஸின் ரியாக்‌ஷன் ஆட்டத்திலிருந்து அனைவரையும் திசைத்திருப்பியது.இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட்டின் தண்ணீர் பாட்டியலை மெஸ்ஸியும், சக வீரர்களும் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டம் ஒருவேளை சமனில் முடிந்து பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றால், எந்தெந்த வீரர் எந்த திசையில் பந்தை அடிப்பார்கள் என்ற குறிப்புகளை கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் ஒட்டி வைத்திருந்தார். போட்டியில் வெற்றி பெறும் வேட்கையில் வியூகங்களுடன் வந்திருந்த இங்கிலாந்து வீரர்களால், வலிமைமிக்க ஆர்ஜென்டீன அணியை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் ராஜதந்திரங்கள் அனைத்து வீணாகிவிட்டதாகவும், போட்டிக்குப் பின்னர் மெஸ்ஸியின் ரியாக்‌ஷன் விடியோக்களும் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.ஃபாக்லாந்து தீவு போஸ்டர் சர்ச்சையை ஃபிஃபா விசாரிக்க வேண்டும்: பிரிட்டன்In the middle of Argentina's celebrations for sealing a spot in the FIFA World Cup2026 final, Lionel Messi found something that completely took his mind away from the game.