ஜலதோஷம், கண் பிரச்னை... வீட்டு மருத்துவக் குறிப்புகள்!

Wait 5 sec.

பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும். பிஞ்சு அவரைக்காய்களைச் சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும். நெல்லிக்காய்ச் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டாலும் கண் பிரச்னைகள் சரியாகும்.திப்பிலியும் நெற்பொரியும் பொடித்து தேனில் குழைத்து அருந்தினால் விக்கல் விலகும்.ஜலதோஷத்தால் ஏற்படும் அனைத்துத் தொல்லைகளை துளசி இலை நீக்கும். தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தக்கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாறுடன் தேங்காய்ப் பால் சேர்த்துப் பருகி வந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும்.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகள் குணமாகும்.இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் சரியாகும். முகப்பு பக்கத்துக்கு...