ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஃபிஃபா தமிழில் ஜன நாயகன் படத்தின் வசனத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்த மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை இந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 5 முறை மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா உலகக் கோப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தமிழ் மொழியிலும் தமிழ்ப் படத்தின் பெயர்களை, வசனங்களைப் பயன்படுத்தி போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டாவது கோல் அடித்தபோது, லொடாரோ மார்டினெஸை மெஸ்ஸி கட்டியணைக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “ஒரு பேரே வரலாறு” எனக் குறிப்பிட்டுள்ளது. ஜன நாயகன் படத்தில் பாடலாசரியர் விவேக் எழுதிய இந்தப் பாடல் வரிகள் ஃபிஃபா வரைக்கும் சென்று பிரபலமாகியுள்ளது. இந்தப் பதிவில் விஜய் ரசிகர்கள் ”எங்கும் தளபதிதான்” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.மெஸ்ஸிக்கான சிறப்புப் போஸ்டர். ஃபாக்லாந்து தீவு போஸ்டர் சர்ச்சையை ஃபிஃபா விசாரிக்க வேண்டும்: பிரிட்டன்A name that is history itself... A dialogue from a Vijay movie features in the Messi poster released by FIFA!