நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் நன்கொடை விவகாரம் வரையிலான பல்வேறு பிரச்னைகளை எழுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா போன்ற முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருப்பதாவது: “நன்கொடை திருட்டு, வினாத்தாள்கள் கசிவு மற்றும் கல்வித்துறையின் கட்டமைப்புச் சீரழிவு, சிபிஐ, அமலாக்கத்துறையைக் கைப்பற்றுதல், அரசியல் கட்சிகளை உடைத்தல், பல்வேறு ஊழல் முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, வெளியுறவுக் கொள்கை தோல்விகள், 3.5 கோடி வாகன உரிமையாளர்களிடம் எத்தனால் கலப்பு எரிபொருள் பயன்பாட்டைத் திணித்தல், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து மழைக்காலக் கூட்டத்தொடரில் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கேள்வி எழுப்பும்.மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த முக்கியமான பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.We will raise issues ranging from the question paper leak to the Ram Temple in Parliament! — Khargeமுதல்வர் பதவி.. புடவையில் காதலி.. முதல் வரிசை.. வைரலாகும் கேரள நடிகரின் சர்ச்சைப் பேச்சு!