பயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு!எப்படி அணுகுவது?

Wait 5 sec.

ஐஆர்சிடிசி இணையதளத்தின் பீட்டா பதிப்பு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பயனர்களுக்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளத்தை பயன்படுத்துவது பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.இந்தப் புதிய பீட்டா பதிப்பை www.irctc.co.in/eticket என்ற இணையதள முகவரியில் அணுகலாம். தற்போதுள்ள இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் இதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த இணையதளத்தைப் பற்றி பயனர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.புதிய ஐஆர்சிடிசி இணையதளம்!ஐஆர்சிடிசி-யின் புதிய 'பீட்டா' (beta) இணையதளம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த மாதம் ஜெய்ப்பூரில் மால்வியா தேசிய தொழில்நுட்பக் கழகத்திற்கு வருகை தந்திருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாணவர்களுடன் உரையாடும்போது, ​​மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் ஜூலை 15-க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.ரயில்வே அமைச்சகம் இது பற்றி கூறுகையில், ஐஆர்சிடிசி-யின் இந்த புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பு, பயனர்கள் பயன்படுத்தி, தோற்றம், செயல்பாட்டு அனுபவத்தை அறியவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.என்னென்ன சிறப்பம்சங்கள்?ஐஆர்சிடிசி தனது 'பீட்டா' பதிப்பில் நான்கு முக்கிய அம்சங்களை மேம்படுத்தியிருக்கிறது.முதல் மாற்றம்... தேவையற்ற 'கேப்ட்சா' (captcha) குறியீடுகள், பாப்-அப் (pop-up) விளம்பரங்கள், மின்னும் கிராபிக்ஸ் அல்லது கவனத்தைச் சிதறடிக்கும் பிற அம்சங்கள் எதுவும் இருக்காது.இரண்டாவது... ஒரு வழித்தடத்தில் டிக்கெட் இருக்கிறதா என்று ஆராயும்போது, பயணிகள் அனைத்து வகுப்புப் பெட்டிகளிலும் இருக்கை பற்றிய நிலவரங்கள் அனைத்தையும் ஒரேயிடத்தில் அறியலாம்.மூன்றாவது மாற்றம்... டிக்கெட் முன்பதிவில் வேகம்.. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் மேற்கொள்ளும் படிநிலைகள் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. நான்காவது.. இணையதளத்தில் ஒரு முறை டிக்கெட் முன்பதிவு செய்தால், அந்த பயணிகளின் விவரங்களைச் சேமித்து வைக்கும் வசதி வருகிறது. இதனால் மீண்டும் முன்பதிவு செய்வது எளிதாகிறது.ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு வயது 24!2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம், தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 14.5 லட்சம் ரயில் டிக்கெட் முன்பதிவுகளைக் கையாள்கிறது; நாட்டின் மிகவும் பிஸியான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.இதன் செயல்பாடு குறித்துப் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இந்த பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பயனர்கள் கருத்துத் தெரிவிக்கலாம். IRCTC Beta version is now live! How to access it?