டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் (241) குவித்தவர்களாக உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.எம்எல்சி தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 266/9 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய வாஷிங்டன் ஃபிரீடம் அணி 18.4 ஓவர்களில் 270/4 ரன்கள் குவித்து வென்றது. இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் நம்.4ல் களமிறங்கிய ஆண்ட்ரீஸ் கௌஸும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதுதான் டி20 வரலாற்றிலேயே இருவர் இணைந்து அடித்த அதிகபட்ச ரன்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரீஸ் கௌஸ் 132 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார். ஸ்மித் கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்து, 110 ரன்கள் குவித்தார். முன்னதாக, விராட் கோலி - ஏபிடி வில்லியர்ஸ் இணைந்து 2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 229 ரன்கள் குவித்திருந்தார்கள். சர்வதே டி20 போட்டிகள், கிளப் போட்டிகளிலும் சேர்த்து ஸ்டீவ் ஸ்மித் - ஆண்ட்ரீஸ் கௌஸ் முதலிடம் பிடித்துள்ளார்கள். இந்த வெற்றியுடன் நாளை சேலஞ்சர் ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். அதில் வென்றால், எம்எல்சி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.A record-breaking partnership pic.twitter.com/Rr0peUbcZJ— Cognizant Major League Cricket (@MLCricket) July 16, 2026ஒரு பேரே வரலாறு... ஃபிஃபா வெளியிட்ட மெஸ்ஸி போஸ்டரில் விஜய் பட வசனம்!The record set by Steve Smith and Andries Gous in T20 history!