உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், அறிவிக்கப்படாத காரணங்களால் அந்நாட்டின் அரசுக்குள் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் யூலியா ஸ்விரைடென்கோ கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) அன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், சில முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் அரசின் எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனமான நாஃப்டோகேஸ் நிறுவனத்தின் தலைவரான 48 வயதாகும் செர்ஹி கோரெட்ஸ்கி நாட்டின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செர்ஹி கோரெட்ஸ்கி பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு உக்ரைனின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உக்ரைனில் குளிர்க்காலம் தொடங்கவுள்ள நிலையில், ரஷியா உடனான போருக்கு இடையே எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக பிரதமராக செர்ஜி கோரெட்ஸ்கி நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2025 குளிர்காலத்தில் உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் அந்நாட்டின் மின்சார விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், குளிரில் வாடிய உக்ரைனிய மக்களின் வெப்பமூட்டும் அமைப்புகள் செர்ஜி தலைமையிலான நாஃப்டோகேஸ் நிறுவனத்தின் உதவியுடன் இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடல்வழி முற்றுகைIt has been reported that Serhiy Koretskyi has been selected as Ukraine's new Prime Minister.