விண்ணப்பிக்கலாம் வாங்க... விரைவு ரயில் கார்ப்பரேஷனில் துணை பொறியாளர் வேலை!

Wait 5 sec.

தேசிய விரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy Engineer (Civil,Track)காலியிடங்கள்: 18தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.பணி: Deputy Engineer (Electrical)காலியிடங்கள் : 4தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.பணி: Deputy Engineer (Signalling & Telecom)காலியிடங்கள் : 5தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.பணி: Deputy Chief Controller (Rolling Stock)காலியிடங்கள்: 3தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெகாட்ரானிக்ஸ்ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.பணி: Deputy Chief Controller (Operations)காலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.பணி அனுபவம்: மேற்கண்ட அனைத்துப் பணிகளுக்கும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம்: ரூ. 400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி , பெண்களுக்கு விண்ணப்பக் கட் டணம் கிடையாது.விண்ணப்பிக்கும் முறை: https://jobapply.in/NHSRCL 2026DyEngineer என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.7.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Apply for the post of Deputy Engineer, Deputy Chief Facility Controller...ரூ.13 லட்சம் சம்பளத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீயணைப்பு அதிகாரி பணி