போக்சோ புகார் அளித்த சிறுமியுடன் தனது மனைவி, 2 மகன்களை இவர் கொன்றாரா? 6 பேர் கொலையில் புதிய தகவல்

Wait 5 sec.

"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் அந்த வழக்கை தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற மற்றொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனது மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகளைக் அவர் கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் நடந்தன"