கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் வழங்கப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்கள்(ஜேஆர்எப்) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் என்பது அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும். இது தீவிரமான பல்துறை ஆராய்ச்சியின் அடிப்படையில், அதிவேக அணு உலை தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய எரிபொருள் சுழற்சி வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பொறியியல் அறிவியல் ஆகிய துறைகளில் உதவித்தொகையுடன் 'இளம் ஆராய்ச்சியாளர்' பணிகளை வழங்குவதன் மூலம், பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன மற்றும் முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்படும் மேம்பட்ட ஆராய்ச்சிகளில் பங்களிக்க, திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களை இந்த மையம் ஊக்குவித்து வருகிறது. கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், அணுசக்தித் துறையின் கீழ் 'நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக' செயல்படும் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. கணிதம், அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் அறிவியல் ஆகிய துறைகளில் கல்விசார் சிறப்பை வளர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக இது விளங்குகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் 'ஆராய்ச்சி நிறுவனங்கள்' பிரிவில், 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த நிறுவனத்தில் தற்போது, உதவித்தொகையுடன் வழங்கப்படும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்கள்(ஜேஆர்எப்) பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள்ம் வருமாறு:வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: IGCAR/02/2026பணி: Junior Research Fellow (JRF)காலியிடங்கள் : 50வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும். தகுதி: Physical Sciences,Chemical Sciences Engineering துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் GATE,,NET,,JEST, CSIR-NET போன்ற ஏதாவதொரு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 2.8.2026 சென்னையில் நடை பெறும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். உதவித்தொகை: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.37,000 உதவித்தொகையுடன் அணுசக்திக் கழக கல்லூரியில் முனைவர் படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். படிப்பானது உத்தேசமாக ஆகஸ்ட் மாதம் 3-ஆவது வாரம் தொடங்கும்.விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.7.2026 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited from interested students of Indian Nationals for the award of Junior Research Fellowships at IGCAR, Kalpakkamரூ.13 லட்சம் சம்பளத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீயணைப்பு அதிகாரி பணி