ஐரோப்பிய ஒழுங்குமுறை விதிகளால் ஆப்பிள் நிறுவனத்தின் பென்சில், மறு வடிவமைப்புக்குட்படுத்தப்படுகிறது. ஐபேட் உடன் வழங்கப்படும் ஆப்பிள் பென்சிலில் ஒழுங்குமுறைத் தேவைகளுக்குட்பட்டு புதுமைகள் புகுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் எம்6 ஐபேட் ப்ரோ 2027 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதனுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஆப்பிள் பென்சிலும் அறிமுகமாகிறது. சமீபத்தில் பென்சில் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளபோதும், அதில் உள்ளூற சில மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. ஐரோப்பிய ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டு இந்த மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் செய்யவுள்ளது. அதாவது, அடிக்கடி பழுதுபார்க்கக்கூடிய வடிவமைப்புகளைக் கொண்டதாக பேட்டரிகள் இருக்க வேண்டும். அதிக பழுதுபார்க்கும் நிலையங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. இவை மடிக்கணினி, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என அனைத்து வகையான மின்னணு பொருள்களுக்கும் பொருந்தும். இந்த விதிகளுக்குட்பட்டு ஐபேட் பென்சிலில் மாற்றங்களை செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது.இதன்படி இரு பென்சில்களை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இவை 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Apple Pencil affected by European regulations Apple could launch revamped Pencil lineup