மதுரையில் வாகன விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு

Wait 5 sec.

மதுரையில் வாகன விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த திருநெல்வேலி சமாதானபுரத்தைச் சேர்ந்த சிறியபுஷ்பம் (56), இடையமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (46), திருச்சியைச் சேர்ந்த சூர்யா (29), திருவாரூர் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (60), திருநெல்வேலி திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் (40) ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகினர்.மேலும், மதுரை, வஞ்சி நகரத்தைச் சேர்ந்தபெருமாள் (71) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.இந்த விபத்தில் பலியான ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழு நபர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 நபர்களுக்கு தலா ரூ. 50,000-ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!The Chief Minister has expressed condolences to the families of those who lost their lives in a vehicle accident in Madurai and has also announced relief assistance for Vijay's family.