தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் 3,000 திரைகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தவெக தலைவர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் வெளியீடாக தேர்தலுக்கு முன்பே, ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது.ஆனால், சென்சார் சான்று கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு 7 மாதங்கள் தள்ளிப்போனது. தற்போது தவெக தலைவர் விஜய், தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார். இந்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.இதையடுத்து, ஜன நாயகன் திரைப்படம் வருகிற ஜூலை 23 ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.விஜய் முதல்வராகியிருக்கும் சூழலில், அவரின் கடைசி திரைப்படம் என்பதால், மிகப் பெரியளவில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதனால், தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 1000 திரைகளிலும், உலகளவில் 3,000 திரைகளிலும் திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவை தவிர, உலகளவில் 30 நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.'Jana Nayagan' releasing on 3,000 screens!விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் என்னென்ன 'கட்'?