ஒமர் அப்துல்லாவுக்கு பாஜக அவதூறு நோட்டீஸ்! காரணம்?

Wait 5 sec.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பாஜக தரப்பில் பேரம் பேசப்படுவதாகக் குற்றம் சாட்டியதற்கு, முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு அக்கட்சியின் காஷ்மீர் பிரிவு அவதூறு நோட்டீஸ் அனுப்பியது. ஸ்ரீ நகரில் உள்ள ஹஸ்ரத்பால் பகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய ஓமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சியைப் பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை பணம், அமைச்சர் பதவி, மாநில அந்தஸ்து வழங்குவதாக பாஜக தரப்பில் பேரம் பேசப்படுவதாக முதல்வர் ஒமர் அப்துல்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஆதாரமற்றவை, அவதூறு விளைவிப்பவை என கூறியுள்ள பாஜக, இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகத் தனது கருத்தைத் திரும்பப் பெறவும், ஏழு நாள்களுக்குள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சத் பால் சர்மாவின் அறிவுறுத்தலின் பேரில், வழக்குரைஞர் பரிமோக்ஷ் சேத் மூலம் அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.முதல்வர் ஒமர் அப்துல்லாவின் கருத்துகள் பாஜக, நிர்வாகிகளின் நற்பெயருக்கும் பொது மதிப்பிற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், பாஜக குறித்து அவதூறு பரப்பும் வகையிலான எந்தவொரு தகவலையும் இனி வெளியிடவோ, பரப்பவோ கூடாது என அவதூறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.The Kashmir unit of the BJP sent a defamation notice to Omar Abdullah for alleging that the party was trying to strike deals with National Conference MLAs in Jammu and Kashmir.அமர்நாத் பக்தர்கள் சென்ற வாகனம் ஒன்றோடொன்று மோதல்: 18 பேர் காயம்!