இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஜய் சேதுபதியை டிரெயின் திரைப்படத்திற்காக பாராட்டியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான டிரெயின் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முழுக்கதையும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நடிகர் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாராலும் இப்படத்தைச் செய்திருக்க முடியாது. நடிகர்கள் கமல் ஹாசன், ஆமிர் கானால் கூட நடித்திருக்க முடியாது. காரணம், இது விஜய் சேதுபதிக்காகவே எழுதப்பட்டது. ஒரு எரிமலை மாதிரி மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். என் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசுவதற்காகச் சொல்லவில்லை. படம் நன்றாக இருந்தால் மட்டும்தான் ஓடும். என்னால் விஜய் சேதுபதியிடம் பாணியாற்ற முடிந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது” எனத் தெரிவித்துள்ளார். சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ எந்த ஓடிடியில் வெளியாகிறது? Director Mysskin has praised actor Vijay Sethupathi for the movie Train.