நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் ருக்மணி வசந்த்?

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் தர்மன் திரைப்படத்தில் ருக்மணி வசந்த் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் பிரபல நடிகை ருக்மணி வசந்த் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இரண்டு நாயகிகள் உள்ள நிலையில், ருக்மணி குறித்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரமின் தில்! பெரிதும் அறியாத சில சுவாரஸ்யங்கள்!Reports indicate that Rukmini Vasanth is set to join the cast of the film Dharman, starring Rajinikanth.