ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. தமிழ் மாதமான ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம், வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காலை முதலே குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோன்று தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள நிசம்பசூதனி என்கிற வட பத்திரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காலை முதல் பக்தர்கள் நெய் மற்றும் மாவிளக்கு விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.First Friday of Aadi: Crowds of devotees at Amman templesசேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகம்!