தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம்! ஜூலை 20 வரை என் உயிருக்கு எதுவும் ஆகாது: வாங்சுக்

Wait 5 sec.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்தில் தொடர்ந்து 20 நாள்களாக கல்வியாளரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இருப்பினும், வாங்சுக் இன்றுடன் 20-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக் களத்தில் ஆதரவாளர்களிடையே வாங்சுக் பேசியதாவது, நான் உடலளவில் பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், உள்ளே (மனதளவில்) மிகவும் வலுவாகவே இருக்கிறேன். என் தீர்மானத்தை யாராலும் உடைக்க முடியாது.நீங்கள் அனைவரும் உள்ளேயும் வெளியேயும் வலுவாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.நீங்கள் அனைவரும் ஜூலை 20 வரை போராட்டத்தை நடத்தி, ஒரு மாதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதுவரையில் எப்படியேனும் நான் உயிருடன்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.வாங்சுக் தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம்நீட் தோ்வு முறைகேடு, அதன்பின்னா் நடந்த மாணவா்கள் தற்கொலை சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி போராட்டத்தை தொடங்கியது. மேலும், வருகிற 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கும்போது, நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது.இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வாங்சுக், கடந்த மாதம் 28-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவா்கள் வேண்டுகோள் விடுத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் அவா் 20-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தாா்.தொடா் உண்ணாவிரதத்தின் காரணமாக அவரின் உடல் எடை 9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது. அவரின் உடலில் உள்ள சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவையும் அதிகரித்துள்ளது.நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூச்சுவிடவும் டோக்கன் வாங்க வேண்டுமா? பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்விSonam Wangchuk has been on an indefinite hunger strike for 20 days