நாடாளுமன்றத்தை பாஜக அரசு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிப்புக்கு மாணிக்கம் தாகூர் விமர்சனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது. அடுத்ததாக எம்.பி.க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது.பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்.நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்னைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவதுதான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா?மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.இத்தகைய தடை உத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி" என்று கூறியுள்ளார்.2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோNo Smart Watches Or Smart Glasses in Parliament: Congress Chief Manickam Tagore questions BJP government