ரூ. 40 கோடி மோசடி புகார்: காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்!

Wait 5 sec.

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் மேற்கொண்டதில் ரூ. 40 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பெண் கவுன்சிலர்கள், அவரை இழுத்து தாக்கினர். இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை மேயர் கா.ரங்கநாயகி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடந்து கூட்டத்தை விட்டு வெளியேறிய கவுன்சிலர் காயத்ரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "செம்மொழிப் பூங்கா பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது, மாநகராட்சியில் நடைபெற்ற தணிக்கை மூலமாகத் தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டால் என்னைத் தாக்குகின்றனர். முதல்வர் விஜய் இச்சம்பவத்தைப் பார்த்தால் திமுகவினரைச் சும்மா விடமாட்டார்" என்றார்.Rs. 40 crore fraud allegation: DMK councilors attack Congress councilor in coimbatoreபழனி கோயில் நில மோசடி: மூவர் தலைமறைவு! தேடும் பணி தீவிரம்!