இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டீன அணியினர் ஃபாக்லாந்து தீவு எங்களுக்குச் சொந்தமானது என்ற போஸ்டருடன் கொண்டாடினர். அரசியல் ரீதியான போஸ்டர்களுடன் ரசிகர்கள் கொண்டாடலாம் ஆனால் வீரர்கள் கொண்டாடுவது ஃபிஃபா விதிகளின்படி குற்றம் என்பதால், அபராதம் அல்லது தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர். இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீன வீரர்கள் மூவருக்கு தலா ஒரு யெல்லோ கார்டும் இங்கிலாந்து வீரர் ஒருவருக்கும் ஒரு யெல்லோ கார்டும் கொடுக்கப்பட்டது. மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி சில நிமிஷங்களில் ஆர்ஜென்டீனா த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வென்ற பிறகு, 1982ல் நடந்த போரினைக் குறிப்பிட்டு ஃபாக்லாந்து தீவுக்காரர்கள் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய (லாஸ் மால்வினஸ் சன் ஆர்ஜென்டினஸ்) போஸ்டரை ரசிகர்கள் ஏந்தி கொண்டாடினர். ஆர்ஜென்டின வீரர்கள் பலர் இந்தப் போஸ்டர்களுடன் கொண்டாடியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல், மதம், கருத்தியல் சார்ந்த செய்திகளை அதிகாரபூர்மான போட்டிகளின்போது பயன்படுத்தக் கூடாதென ஃபிஃபா விதிமுறைகளில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைகள் அரசியல் தொடர்புடையதாகக் கூறப்பட்டு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2014ல் ஸ்லோவேனியா உடனான நட்பு ரீதியான போட்டியில் ஆர்ஜென்டீனாவுக்கு இதே மாதிரியான போஸ்டருக்காக 20,000 பவுண்டு (ரூ.19,50,000) அபராதமாக விதிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் ஆர்ஜென்டீனாவுக்கு இந்த முறையும் அபராதம் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து ஆர்ஜென்டீனா விளையாடவிருக்கிறது.Jogadores argentinos mostram bandeira com a frase “As Malvinas são nossas”.A Fifa havia proibido manifestações sobre o assunto no jogo de hoje. pic.twitter.com/grtQvYPkpS— Pedro Ramiro (@_pedroramiro) July 15, 20261982 போருக்கான பதிலடி..! இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றிக் களிப்பில் ஆர்ஜென்டீன மக்கள்!Argentina risk FIFA sanctions over Falklands Islands banner after England win