த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!

Wait 5 sec.

எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக்கில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சேலஞ்சர்ஸ் சுற்றிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எலிமினேட்டரில் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சேலஞ்சர்ஸ் சுற்றி சான்பிரான்சிஸ்கோ அணியுடன் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு மோதியது. டாஸ் வென்ற சான்பிரான்சிஸ்கோ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 20 ஓவர்களில் 238/6 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கௌஸ் 73 ரன்கள் குவிக்க, ஸ்டீவ் ஸ்மித் 43 ரன்கள், மிட்செல் ஓவன் 42 ரன்கள் எடுத்தார்கள். சான்பிரான்சிஸ்கோ அணி சார்பில் ஜேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி த்ரில் வெற்றி பெற்றது. சான்பிரான்சிஸ்கோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ ஷார்ட் 121 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேவியர் பார்ட்லெட் இறுதியில் 13 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார்.ஆண்ட்ரீஸ் கௌஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். வாஷிங்டன் ஃப்ரீடம் அணி இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் நைட்ரைடர்ஸ் உடன் ஞாயிற்றுக்கிழமை (இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு) மோதுகிறது. INTO THE FINALS OF #MLC2026 Sunday ✅Oakland Coliseum ️ Los Angeles Knight Riders ⏰ 4:30 PM PT | 5:00 AM IST #FreedomExpress #LAKRvWF pic.twitter.com/9RC8J50zRt— Washington Freedom (@WSHFreedom) July 17, 2026Washington Freedom won by 7 runs and into the finals of MLC