அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 13) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் தொடர்பாக செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து அசோக்குமார் தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி ஆந்திர இளம்பெண் தொடர்ந்த வழக்குஅமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குமுரசொலி அறக்கட்டளை நிலம் குறித்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.