சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.மேற்கு ஆசிய போா்பதற்றம் முடிவு, கச்சா எண்ணெய் விலை குறைவு, இந்திய ரூபாய்க்கு நிகராண டாலரின் மதிப்பு உயா்வு, சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடும் குறைவு போன்ற சா்வதேச காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,05,440-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,180-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை?வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 240-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. Today's gold and silver update in Chennai...16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!