நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று(ஜூலை 15) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் மோடி, காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "காமராஜரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும் பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை இந்த நாட்டின் வளர்ச்சி, கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தார். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, அடுத்த தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். Remembering Thiru K. Kamaraj Ji on his birth anniversary. A stalwart of India’s freedom movement and an exceptional public figure, he dedicated his life to nation-building. His unwavering commitment to areas like education, inclusive development and the welfare of the…— Narendra Modi (@narendramodi) July 15, 2026Kamarajar dedicated his life to the nation development: PM Modiஇந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4