சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளார். தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சரணாலயத்தைச் சுற்றியுள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த மக்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக அங்கு பூர்வகுடிகளாக வாழ்ந்து வருவதாகவும் அந்த மக்களை அங்கிருந்தும் அகற்றக்கூடாது எனவும் முதல்வரிடம் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மலைவாழ் சங்க தலைவர் டில்லி பாபுவும் இந்த சந்திப்பில் உடனிருந்தார். CPIM P shanmugam meets CM vijay on megamalai issueஇந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4