முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனிடையே, அவருக்கு எதிராக காவல்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.இந்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக எ.வ.வேலுவுக்கு உத்தரவிட்டது.இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது, முறையாக ஆய்வு செய்யப்படாமல் லுக்-அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததாக தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.இந்த வாதத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, எ.வ. வேலுவை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை, அவர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.தொடர்ந்து, லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.Supreme Court dismisses Tamil Nadu government's appeal against E.V. Velu!முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு!