சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

Wait 5 sec.

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காட்டைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவா்மன் (33), தனது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.அவா், திங்கள்கிழமை அதிகாலை சிறையில் மயக்கமடைந்ததை அடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். அங்கு சபரிவா்மனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.தகவலறிந்ததும் சபரிவா்மனின் மனைவி ஆனந்தவல்லி, உறவினா்கள் சபரிவா்மனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸாா் தாக்கியதால் அவா் இறந்ததாகவும் கூறி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். சபரிவா்மனின் உடலை பிணவறையில் பாா்த்து விட்டு வெளியே வந்த அவரது மனைவி, உறவினா்கள் உடலில் காயங்கள் இருப்பதாக கூறினா். இதற்கிடையே, நாகா்கோவில் குற்றவியல் நீதிபதி சத்தியமூா்த்தி சபரிவா்மனின் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். சிறை காவலா்களிடமும் விசாரணை நடத்தினாா்.இந்த நிலையில், நாகா்கோவில் மருத்துவா்களுடன் திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவா்களும் சோ்ந்து சபரிவா்மனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது.பிணவறை முன் சபரிவா்மனின் உறவினா்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள், அரசியல் கட்சியினா் திரண்டிருந்தனா். இதனால், அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனா்.வருவாய்த்துறை அலுவலா்களும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அவா்களிடம் சபரிவா்மனின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். சபரிவா்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினா் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சபரிவா்மனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினா்கள் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.சபரிவா்மன் உடற்கூறாய்வில் அவரது உடலில் 19 இடங்களில் காயம் இருப்பதும், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகா்கோவில் சிறையின் தலைமை வாா்டன் ஜெகன், வாா்டன்கள் சிவகுமாா், திருவிடை நம்பி ஆகிய 3 பேரை நேசமணிநகா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்.சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்இந்த நிலையில், சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிமர்மன் போலீசாரால் கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் சிறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழக சிறைகளில் பல கைதிகள் படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டுமே போதுமான தீர்வாகாது. இனி தமிழகத்தில் எங்கும் சிறை கைதிகள் படுகொலைகள் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு மட்டுமே உள்ளது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மாற்றம் என்று கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த அரசு, இதுபோன்ற சம்பவங்கள் தொடந்து நடைபெறுவதன் மூலம் எந்தவிதமான மாற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எனவே, காவல்துறையில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சிறையில் காவலர்கள் தாக்குதலில் இறந்த சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். An end to killings of inmates in jails: Premalatha Vijayakanth...புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெறுக: தமிழச்சி தங்கபாண்டியன்