பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கிலிருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகளை கர்நாடக அரசு விடுவித்துள்ளது.ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதையடுத்து, பெங்களூர் சின்னசாமி திடலில் ஆர்சிபி நிர்வாகம் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.இந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகத்தினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த சமயத்தில் பெங்களூரு காவல் ஆணையராக இருந்த பி. தயானந்தா, காவல் துணை ஆணையர் சேகர் எச். டெக்கன்னவர் மற்றும் காவல்துறை ஐஜி விகாஷ் குமார் ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகினர்.இவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சேகர் எச். டெக்கன்னவர் மற்றும் விகாஷ் குமார் ஆகியோரின் பணியிடை நீக்க உத்தரவு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில், அதிகாரிகளின் விளக்கங்கள் மற்றும் நிர்வாகத் துறையின் கருத்து ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான விசாரணைகளை கைவிட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.RCB Stampede - 3 IPS Officers Exonerated in the Case!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்!