இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒடிசி திரைப்படத்தின் மேக்கிங் விடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது. உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் சிறப்பு திரையிடலை மும்பையில் கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர். உலகளவிலுள்ள பல ஐமேக்ஸ் திரைகளில் இதனைக் காண ரசிகர்கள் காத்திருப்பதால் ஒடிசி பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். எப்படி ஐமேக்ஸ் கேமராவில் கஷ்டமான காட்சிகளையும் எடுத்தோம் என்பதையும் அக்கேமராவில் ஒலியமைப்புக்குக்கு பட்ட சிரமங்கள் குறித்தும் இதில் பேசியுள்ளனர். மேலும், மொராக்கோ, கிரீஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முக்கியமான காட்சிகளை எடுத்ததையும் பகிர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், நோலன் ஒரு மாஸ்டர் என்பதற்கு இதைவிட உதாரணம் என்ன இருக்க முடியும் என பாராட்டி வருகின்றனர். அஜித் - 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி?A behind-the-scenes video of the film directed by Christopher Nolan has been released on OTT.