இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும் (ஜூலை 14) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,272.34 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 373.75 புள்ளிகள் குறைந்து 77,242.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.85 புள்ளிகள் குறைந்து 24,106.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், என்டிபிசி, இன்ஃபோசிஸ், ஐடிசி, சன் பார்மா, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் வருகின்றன. நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.37, 0.57 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பார்மா, எஃப்எம்சிஜி, உலோகப் பங்குகள் உயர்ந்தன. நிஃப்டி நிதி சேவைகள், ஆட்டோ,ரியல் எஸ்டேட் உள்ளிட்ட மற்ற குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன. அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.95 ஆக இருந்தது. Stock Market: Sensex falls 300 pts, Nifty tops 24,100