இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான முதல் திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் கவனிக்கப்படவில்லை. நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்த பல்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்தது. கடந்தாண்டு செப். மாதம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத இப்படம் நீண்ட நாள்கள் கழித்து ஜூலை 10 அன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், ஓடிடியிலும் கவனம் பெறாமால்தான் இருக்கிறது.கால தாமதமாக வெளியானதால் எதிர்பார்ப்பு இல்லாத படமாக மாறியதும் காரணமாகத் தெரிகிறது. இதுதான், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் படம். அவரது இசையில் ஜாலக்காரி பாடல் உள்பட பின்னணி இசையும் கவனம் பெற்றது. இப்படத்தில் நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாகவும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் புதிய வீடு வாங்கிய ஷ்ருதி ஹாசன்!The first film featuring music by composer Sai Abhyankar failed to garner attention even upon its OTT release.