நடிகர் மோகன்லால் தன் மகள் நடிகையாக அறிமுகமாகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் துடக்கம் என்கிற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கியுள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் ஆக.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் வெளியீட்டு போஸ்டரில் நடிகர் மோகன்லால் இடம்பெற்றுள்ளார். மகள் நாயகியாகும் படத்தில் மோகன்லாலும் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பெரும்பாலும், வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது, அவர்களின் அப்பா நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார். மோகன்லாலும் தன் மகளுக்காக நடித்துள்ளார். அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல்! தலை சுற்ற வைக்கும் வசூல்!Actor Mohanlal has made a special appearance in the film where his daughter is making her debut as an actress.