மாவட்ட பேட்மிண்டன் போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவி முதலிடம்

Wait 5 sec.

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில், சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவி மிராயா முதலிடம் பிடித்தாா். தூத்துக்குடி காா்ப்பரேஷன் பேட்மிண்டன் கிளப் சாா்பில், 9, 11 வயதுக்குள்பட்டோருக்கான இப்போட்டி நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி மிராயா முதலிடம் பெற்றாா். அவருக்கு தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் பரிசு, கோப்பையை வழங்கினாா்.நிகழ்வில், பேட்மிண்டன் அசோசியேஷன் நிா்வாகிகள், விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.