இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரையும் இழந்தது.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.பென் டக்கெட் சதம் விளாசல்: முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்து முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஜேக்கப் பெத்தேல் 93 பந்துகளில் 91 ரன்கள் (11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்து 9 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார்.தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், நடப்பு தொடரில் மூன்றாவது அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்கள் (18 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தார். அதன் பின் களமிறங்கிய கேப்டன் ஹாரி ப்ரூக் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர்.ஒரு முனையில் அரைசதம் கடந்து ஜோ ரூட் விளையாட, மறுமுனையில் அதிரடியில் மிரட்டினார் ஜோஸ் பட்லர். அதிரடியாக விளையாடிய அவர் 13 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஜோ ரூட் 48 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் பிரஷித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.அதிரடி காட்டிய ரோஹித் சர்மா: 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்த நிலையில், 10 பௌண்டர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்த கில், ஆதில் ரஷீத் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரும் இணைந்து நிதானமாகவும், அதே நேரத்தில் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். அதிரடி காட்டிய ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 30 ஆவது சதத்தை விளாசி அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 138 ரன்கள் எடுத்து ஜேக்கப் பெத்தேல் பந்து வீச்சில் போல்டானார். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 74 ரன்கள் விளாசி அவுட்டாக, அடுத்து வந்த வீரர்களும் மட்டையை சுழற்றி வரிசையாக விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இஷான் கிஷான் 14 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர்கள் ரன் ஏதுமின்றியும், கேஎல். ராகுல் 12 ரன்களும், அக்ஷர் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய குர்நூர் பிரார் 18 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 15 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணித் தரப்பில் சாம் கரன் 4 விக்கெட்டுகளை அள்ளினார். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ஏற்கெனவே, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்திருந்த இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.Sam Curran delivered the decisive blow as Virat Kohli's valiant innings came to an end, all but sealing England's victory in the series-deciding third ODI at Lord's on Sunday. Chasing a daunting 388, Kohli's brisk 74 off 60 balls had kept India's hopes alive after Rohit Sharma's century