கோவையில் தவெக உள்கட்சி மோதல்: பெண் நிர்வாகி தாக்கப்பட்டதால் பரபரப்பு

Wait 5 sec.

கோவை கணியூரில் சூலூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற பெண் நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரது ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூலூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் முன்னிலையில் நடந்த இந்த மோதல் சக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோவை சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சுகுமார் தலைமையில் கணியூர் பகுதியில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பேரவை உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற கட்சியின் ஊராட்சி செயலாளர் வசந்தியை கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கி ஆடையை கிழித்து தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வசந்தியை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராகப் பணியாற்றி தேர்தலிலும் பணியாற்றிய பெண் நிர்வாகியை அந்த கட்சியினரே பேரவை உறுப்பினர் முன்னிலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிகப்பட்ட தவெக நிர்வாகி வசந்தி கூறியதாவது: தவெக-வில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும், தேர்தல் சமயங்களில் கட்சி அறிவித்த நபர்களுக்காக 25 நாள்களுக்கும் மேலாக இரவு பகல் பாராமல் தீவிரப் பிரசாரம் செய்தேன். தங்களது பகுதிக்கு வருகை தந்த சட்டப்பேரவை உறுப்பினரை மரியாதை நிமித்தமாக மாலை அணிவிக்கச் சென்றபோது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் தடுத்தனர். நீங்கள் எங்கள் அணியைச் சேர்ந்தவர் இல்லை, எங்களது அணியினர் மட்டுமே மாலை அணிவிக்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஸ்வின் மற்றும் செந்தில் ஆகியோர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளியதாகவும், கழுத்தை நெரித்துத் தாக்கினர். இந்த மோதலில் தனது ஆடை கிழிக்கப்பட்டதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கண்ணீருடன் தெரிவித்தார். தொடர்ந்து கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புதிதாக அணி அமைத்து ஓரம்கட்டுவதாக தெரிவித்தார்.தாக்குதலுக்குள்ளான பெண் நிர்வாகி வசந்திக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதுடன், ஆடை கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மயக்க நிலை காரணமாகவும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சிக்காக உழைத்த பெண் நிர்வாகி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி, ஆடை கிழிபடும் அளவுக்குத் தாக்கிய உள்கட்சி நிர்வாகிகள் மீது தவெக தலைமை மற்றும் அதன் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் உள்ளூர் தவெக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.TVK Internal Clash in Coimbatore: Uproar After Female Office-Bearer Assaultedலஞ்சம்: தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் கைது