லஞ்சம்! சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!

Wait 5 sec.

சென்னை மாநகராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் லஞ்சம் பெறுதல், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் டெண்டர் முறகேடு, நிதி முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 மூத்த அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், 4 பேர் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன.ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த்ததாக மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரியான டாக்டர் தேவிகலா, ஜூலை 9-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மாதவரம் மண்டல உதவிச் செயற்பொறியாளர் ஆனந்தராவ், ஜூலை 10-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.முறையான அனுமதி பெற்றிருந்த ஒருவரின் கட்டடத்தைப் பூட்டி சீல் வைத்துவிடுவதாக மிரட்டி ரூ. 50,000 லஞ்சம் பெற்றதற்காக கோடம்பாக்கத்தை சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், ஜூலை 10-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மாநகராட்சியில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ. 6 லட்சம் பெற்றதாக செனாய் நகர் மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணிபுரியும் சிவபொற்கொடி, ஜூலை 11-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து வந்த கண்ணன், ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்தந்தாரரிடம் லஞ்சம் கேட்டதாகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தமிழகத்துக்கு காவிரி நீர் கிடையாது: கர்நாடகம்Six officials suspended for irregularities in the Chennai Corporation