பராமரிப்பு பணி: பாலக்காடு:திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

Wait 5 sec.

மதுரை பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (எண்: 16731) பாலக்காடு - சாத்தூா் இடையே மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் இந்த ரயிலானது, சாத்தூா் - திருச்செந்தூா் இடையே ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.