20 வயது மெஸ்ஸி - குழந்தையாக லாமின் யமால்..! உண்மையான புகைப்படமென யுனிசெஃப் உறுதி!

Wait 5 sec.

ஸ்பெயினின் தற்போதைய நட்சத்திர வீரர் லாமின் யமால் தான் குழந்தையாக இருக்கும்போது ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம் இருக்கும் புகைப்படம் உண்மைதான் என யுனிசெஃப் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது, லாமின் யமாலுக்கு 19 வயதும் லியோனல் மெஸ்ஸிக்கு 39 வயதும் ஆகிறது. அந்தப் புகைப்படம் எடுக்கும்போது மெஸ்ஸிக்கு 20 வயதும் யமாலுக்கு ஒரு வயதும் எனக் கூறப்படுகிறது.இன்கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா மோதவிருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 (திங்கள் அதிகாலை 12.30) மணிக்கு நடைபெற இருக்கிறது. சமூக வலைதளங்களில் மெஸ்ஸியுடன் குழந்தையாக இருக்கும் யமால் புகைப்படம் அடிக்கடி பதியப்பட்டுவரும். இது உண்மைதானா என்ற சந்தேகத்துக்கு யுனிசெஃப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. யுனிசெஃப் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆமாம், அந்தப் புகைப்படங்கள் உண்மையானதுதான். 18 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தையாக லாமின் யமாலும் அவரது தாய் ஷெலியா உடன் லியோனல் மெஸ்ஸி யுனிசெஃப் நிதியுதவிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்று, இருவரது சாதனைகளும் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. களத்துக்கு வெளியே மெஸ்ஸி, யமால் இருவரும் யுனிசெஃப்-க்கு ஆதரவு அளித்து குழந்தைகளின் நலனுக்காக நல்லெண்ண தூதுவரகளாக இருந்து வருகிறார்கள். நோக்கம் (கோல்) என்ன? ஓவ்வொரு குழந்தையும் தங்களது தாகத்தை, பசியை கனவுகளை பூர்த்தியடை வைக்க வேண்டும். எங்கள் அணியில் இவர்களை வைத்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. புகைப்பட உதவி: ஜான் மான்ஃபோர்ட். எனக் கூறியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான நடுவர் அறிவிப்பு..! ஸ்லோவோனியா நாட்டிலிருந்து முதல்முறை!More than 18 years ago, a baby named Lamine Yamal and his mom Sheila met Lionel Messi at a UNICEF fundraising photoshoot