குவைத்தின் நீர் சுத்திகரிப்பு மற்றும் மின்சார நிலையம் மீது ஈரான் கடும் தாக்குதல்!

Wait 5 sec.

குவைத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின்சார நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குவைத்தில் 90% குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமே கிடைக்கின்றது. அதில், பாதிப்பு ஏற்பட்டால் நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இந்தத் தாக்குதலால் அந்த நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, குவைத்தின் நீர், மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குவைத் அரசுக்கு எதிரான ஈரானின் நடத்திய கொடூரமான தாக்குதலில் மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு, ஆலை மோசமாக சேதமடைந்து, பல மின் உற்பத்தி அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறையினர் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தொழில்நுட்பக் குழுக்கள் மின்சாரக் கட்டமைப்பின் சேதங்களைக் கண்காணித்து, அவற்றைச் சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த அசாதாரண காலகட்டத்தில் பொதுமக்கள் மின்சாரத்தை சேமிக்க வலியுறுத்துகிறோம். மேலும், நாட்டின் நிலவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு தகவல்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். Iran launches a severe attack on Kuwait's water desalination and power plantஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!