காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3% உயர்வு!

Wait 5 sec.

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் காலாண்டு வருவாய் அறிவிப்புக்கு முன்னதாக, இன்றைய வர்த்தகத்தில், அதன் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 45,334 கோடி அதிகரித்தது.மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்கின் விலை 2.59 சதவீதம் உயர்ந்து ரூ. 1,326.50 ஆகவும், வர்த்தகத்தின் போது ​​இந்த பங்கு 2.85% உயர்ந்து ரூ. 1,329.95 ஆக வர்த்தகமானது.நிஃப்டி-யில் இந்த பங்கு 2.36 சதவீதம் உயர்ந்து ரூ. 1,327.20 ஆக நிறைவடைந்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 45,334.01 கோடி அதிகரித்து ரூ. 17,95,091.26 கோடியாக உயர்ந்தது.இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் 8.49 லட்சம் பங்குகளும், நிஃப்டி-யில் 183.02 லட்சம் பங்குகளும் வர்த்தகமானது.Shares of Reliance Industries Ltd climbed nearly 3 per cent on Friday.ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் காலாண்டு லாபம் இரட்டிப்பு!