வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவா

Wait 5 sec.

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகையை லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான, பு குவாக் தீவு அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 படகு ஊழியர்களும் இருந்தனர்.கடந்த ஜூலை 11 ஆம் தேதி பகல் 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர். பலியானோரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.சுற்றுலா சென்றவர்களில் பலரும் சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா மொபைல் நிறுவனத்தின் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:வியத்நாம் படகு விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் லாவா நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் அடைகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். முறையான ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு பலியானோர் குடும்பத்தினருக்கு நேரடியாக இந்த நிவாரணத் தொகை சென்றடையும். இந்த உதவி மனிதாபிமான அடிப்படையில் தன்னார்வத்துடன் வழங்கப்படுகிறது.பலியானவர்கள் லாவா நிறுவனத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கடுமையான சூழலில் பலியானோர் குடும்பங்களுடன் துணை நிற்பதுடன் அவர்களுக்கான ஆதரவையும் வழங்குகிறோம் என்று லாவா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.pic.twitter.com/WFRPfv7ZhI— Lava Mobiles (@LavaMobile) July 13, 2026உண்ணாவிரதத்தைக் கைவிடுவாரா சோனம் வாங்சுக்? மிகுந்த வலியால் அவதி! Lava has announced a relief amount of Rs 25 lakh for the families of those who lost their lives in the Vietnam boat accident.