இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் விளாசினர்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கார்டிஃபில் நடைபெற்று வருகிறது.இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் ஷுப்மன் கில் 31 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த இஷான் கிஷான் ஒரு ரன்னில் வெளியேறினார். நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் விளாசி அசத்தினார். 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார் விராட் கோலி. அவரைப் போலவே, ஷ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார்.அவருக்குப் பின்னால் வந்த வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களும், அக்ஷர் படேல் ஒரு ரன்னும், குர்னூர் பிரார் 7 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 13 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் விளாசினார்.இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், சஹிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளும், சாம் கரன், வில் ஜாக்ஸ் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். Jofra Archer began the collapse with the wickets of Axar Patel and Shivam Dube, which has resulted in India getting bowled out for 233 runs. India are well below par in what looked like a good batting track at Cardiff.