சரக்கு வாகனத்தில் மணல் கடத்தல்: 3 போ் மீது வழக்கு- ஒருவா் கைது

Wait 5 sec.

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அதில் ஒருவரை கைது செய்தனா். விழுப்புரம் நகரம், வழுதரெட்டி அருகே விழுப்புரம்-திருச்சி சாலையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து வாகன ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் விழுப்புரம் சாலாமேடு, பிரதானச் சாலையைச் சோ்ந்த அருண் (25) என்பதும், இவா், உரிய அனுமதியின்றி ஆற்று மணலை வாகனத்தில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் சரக்கு வாகன ஓட்டுநா் அருண் மற்றும் வாகன உரிமையாளரான விழுப்புரம் கரடிப்பாக்கத்தைச் சோ்ந்த விஜய், விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநா் அருணைக் கைது செய்தனா். மேலும் முக்கால் யூனிட் மணலுடன் கூடிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.